வீரமே வாகை சூடும் :
வீரமே வாகை சூடும் திரைப்படம் பிப்ரவரி மாதம் 4-ம் தேதி 2022ல், திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.
2 மணி நேரம் 2 நிமிடங்கள் கொண்டுள்ளது.
8.6 IMDb rating பெற்றுள்ளது.
இயக்கம் : து. ப.சரவணன்
எழுத்து : து. ப.சரவணன்,
பொன் பார்த்திபன்
ஒளிப்பதிவு : குரு கன்சிராம்
நடிகர்கள் : விஷால்,
டிம்பிள் ஹயதி
மற்றும் பலர்
இசை : யுவன் சங்கர் ராஜா
தயாரிப்பு : விஷால்
தயாரிப்பு நிறுவனம் : விஷால் பிலிம் பேக்டரி, மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன்.
கதை :
வீரமே வாகை சூடும் திரைப்படத்தில் கதாநாயகன் விஷால் போலீசில் பணிபுரிவதற்காக தேர்வு எழுதிவிட்டு, தேர்வு முடிவுக்காக காத்துக்கொண்டிருக்கிறார்.
விஷாலின் தந்தை ஒரு போலீஸ் ஏட்டாக பணிபுரிகிறார் . விஷாலின் தங்கை ஒரு கல்லூரியில் பயின்று வருகிறார்.
விஷாலின் தங்கை ரவீனா - வை
அங்குள்ள ஒரு லோக்கல் ரவுடியின் தம்பி காதலிக்கிறார். அவர் விஷாலின் தங்கையை காதலிக்குமாறு மிரட்டி வருகிறார்.
விஷாலும், விஷாலின் தங்கையும் அந்த லோக்கல் ரவுடியை அவமானப்படுத்தி விடுகின்றனர்.
இதில் கிளைக்கதையாக பரிசுத்தம் என்பவர் ஒரு கெமிக்கல் பேக்டரியை எதிர்த்து போராடி வருகிறார்.அந்த பேக்டரி - இன் முதலாளியாக ஒரு ஓனர் வருகிறார்
மேலும் விஷாலின் தங்கை படிக்கும் அதே கல்லூரியில் ஒரு கும்பல் கல்லூரி மாணவிகளை காதலிப்பதாக ஏமாற்றி அவர்களுடன் வீடியோ எடுத்துக்கொண்டு அவர்களை மிரட்டி வருகின்றனர் இந்த கூட்டத்தில் திவ்யா என்ற ஒரு இளம்பெண் சிக்கிக்கொண்டு தவிக்கிறார்.
இதற்கிடையே ரவீனா தன் பக்கத்து வீட்டுக்காரரை காதலித்து பெற்றோருடன் ஒப்புதல் வாங்கி இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிகிறது.
ஒரு நாள் மருந்து வாங்க சென்ற விஷாலின் தங்கை கொல்லப்படுகிறார். தங்கையின் காதலனும் இறந்து விடுகிறார்.
விஷால் தன் தங்கையின் இறப்பிற்கு காரணமானவர்களை எவ்வாறு கண்டுபிடிக்கிறார்? அவர்களை பழிவாங்கினாரா? போலீஸ் அதிகாரியாக மாறினாரா? என்பதே வீரமே வாகை சூடும் திரைப்படத்தின் கதை.
கௌரியின் பார்வையில்:
போலீசாக போகும் கதாநாயகன் வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சனைகளை மையமாக வைத்து பல கதைகளை நாம் தமிழ்சினிமாவில் காணலாம்
வீரமே வாகை சூடும் திரைப்படமும் அந்தக் கதைகளில் ஒன்றுதான்.
ஆனால் புதிதாக தர வேண்டும் என்பதற்காக மூன்று கிளை கதைகளை உருவாக்கி படக்குழுவினர் வித்தியாசமான முயற்சியில் உருவாக்கியுள்ளனர்.
எனினும் படத்தில் இன்னும் சற்று கவனம் செலுத்தியிருக்கலாம் .
பல விறுவிறுப்பான காட்சிகள் வீரமே வாகை சூடும் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ளனர்.
இந்த காட்சிகளில் இன்னும் சற்று கவனம் தந்து இருந்தால் இந்த காட்சிகள் அனைத்தும் ரசிக்கும்படியாக இருந்திருக்கும்.
விஷால் ஆக்சன் காட்சிகளில் எப்பொழுதும் போல தனது திறமையை காட்டி அசத்தியுள்ளார்.
திரைப்படத்தில் உள்ள நடிகர்கள், நடிகைகள் அனைவரும் தனது வேலையை அழகாக செய்துள்ளனர் .
படத்தில் அவ்வப்போது தோன்றும் யோகி பாபு-வின் பேச்சும் நம்மை சிரிக்க வைக்கிறது.
வீரமே வாகை சூடும் திரைப்படத்தில் இன்னும் திரைக்கதையில் சற்று கவனம் செலுத்தியிருந்தால் வெற்றி வாகை சூடும் திரைப்படமாக அமைந்து இருக்கக்கூடும்.
- Gowri's View ❤️.
0 Comments