சதிலீலாவதி:
1995 -ல் ஜனவரி 15 ஆம் தேதி பாலுமகேந்திரா இயக்கத்திலும் , கமல்ஹாசன் தயாரிப்பிலும் வெளிவந்தது இந்த சதிலீலாவதி திரைப்படம்.
இத்திரைப்படம் 2 மணி நேரம் மற்றும் 31 நிமிடங்கள் கொண்டுள்ளது.
8.2 IMDb யை பெற்றுள்ளது.
கதை : அனந்த்து (She - Devil )
வசனம் : கிரேசி மோகன்
திரைக்கதை : பாலுமகேந்திரா,
கமல்ஹாசன்
இயக்கம் : பாலுமகேந்திரா
தயாரிப்பாளர் : கமல்ஹாசன்
நடிகர்கள் : கமல்ஹாசன்,
கோவை சரளா,
கல்பனா ,
ரமேஷ் அரவிந்த்,
ஹீரா ராஜகோபால் மற்றும் பலர்.
ஒளிப்பதிவு : பாலுமகேந்திரா
இசை : இளையராஜா
தயாரிப்பு : ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல்
சதிலீலாவதி (கதை):
நம்ம ஆண்டவர் ( கமல்ஹாசன்),அந்தக் காலத்து நடிகை ஸ்ரீதேவி முதல் இப்போ இருக்க நடிகை பூஜா வரை எல்லாருடனும் ஜோடியாக நடித்திருக்கிறார்.
ஆனால் நம்ம கோவை சரளா - வுடன் ஜோடியாக படம் நடித்திருக்கிறார் என்றால் உங்களால் நம்ப முடியுமா? அட ஆமாங்க அவங்க ரெண்டு பேரும் ஜோடியா நடித்த திரைப்படம் தான் சதிலீலாவதி.
காஞ்சனா படத்தில் கூட நம்ம கோவை சரளா ராகவா லாரன்ஸ் கிட்ட சொல்லுவாங்க இல்லையா
"பழமொழி சொன்னா அனுபவிக்கனும் ஆராயக்கூடாது" இது என்றவர் சொல்லி இருக்காருன்னு அது நம்ம கமலஹாசன் சார் இந்த படத்துல சொன்ன ஒரு பிரபலமான வசனம்தான்.
இந்த திரைப்படத்தில் நம்ம கமல்ஹாசன் மற்றும் கோவை சரளா ரெண்டு பேரும் ஜோடியாக நடித்துள்ளனர்.
இத்திரைப்படத்தில் கோவை சரளா தான் நடிக்கனும் -னு ஆறு மாதமாக கமல்ஹாசன் காத்திருந்து நடித்துள்ளனர்.
இத்திரைப்படத்தில் கமல்ஹாசன் மற்றும் கோவை சரளா கொங்கு தமிழ் தான் பேசுவாங்க இது கமல்ஹாசனுக்கு சொல்லிக் கொடுத்ததே நம்ம கோவை சரளா தான்.
இப்பொழுது நம்ம சதிலீலாவதி கதைக்கு வருவோம்,
லீலாவதி( கல்பனா) மற்றும் அருண்(ரமேஷ் அரவிந்த்) இவர்கள் இருவரும் பெற்றோர்களால் திருமணம் செய்து வைக்கப்பட்டு வாழ்கின்றனர்.
இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் இருக்கின்றனர். எனினும் அருணுக்கு கல்பனா குண்டாக இருப்பதாலும், அழகாக இல்லாததாலும் அவள் மீது வெறுப்புடனே வாழ்ந்து வருகிறார்.
அந்த சமயத்தில் அருணுக்கு ஒரு பெண்ணுடன் (பிரியா) பழக்கம் ஏற்படுகிறது.அந்த பழக்கத்தில் அவர்களுக்கு இடையே ஒரு அந்நியோன்யம் உருவாகி,அவர்கள் பெங்களூருக்கு செல்கின்றனர்.
அங்குதான் வருகிறார் நமது கமல்ஹாசன் மற்றும் கோவைசரளா தம்பதியினர். கமல்ஹாசன் ஒரு எலும்பு முறிவு மருத்துவராக ஆக இருக்கிறார் .அத்துடன் கமல்ஹாசன் அருண் உடைய பால்ய சினேகிதர்.
பிறகு பிரியாவிடம் தான் கல்பனாவை விவாகரத்து செய்வதாக கூறி விடுகிறார் அருண்.
இதை அறிந்த லீலாவதி பிரியா மற்றும் அருண்-யை கமல்ஹாசன் மற்றும் கோவை சரளா உதவியுடனும், பல திட்டங்கள் மூலமும் பிரிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார்.
இதில் அவர் வெற்றி பெற்றாரா? அருண் மனம் மாறினாரா? பிரியாவின் நிலைமை என்ன ஆனது? கமல்ஹாசன் மற்றும் கோவை சரளா தம்பதியினர் லீலாவதிக்கு உதவினாரா? என்பதே இந்த சதி லீலாவதி திரைப்படத்தின் கதை.
சதிலீலாவதி திரைப்படம் She - Devil என்ற Hollywood திரைப்படத்தைத் தழுவி எடுக்கப்பட்டது.
சதிலீலாவதி திரைப்படம் David Dhawan என்பவரால் Biwi No 1 (1999) என ஹிந்தியிலும், ரமேஷ் அரவிந்த் ஆல் Rama shama bhama(2005) என கன்னடத்திலும் ரீமேக் செய்யப்பட்டது.
பாடல்கள்:
* மாருகோ மாருகோ
* மகராஜனோடு ராணி
* ஒரு தாரம்
* எத்தனை வகை
கௌரியின் பார்வையில்:
இத்திரைப்படத்தில் ஒரு மனைவி கணவனின் மனதை மாற்ற செய்யும் செயல்களும் ஒரு கணவனுக்காக மனைவி எதை வேண்டுமானாலும் செய்வார் என்பதை காட்டும் விதமாக இருக்கும்.
இத்திரைப்படத்திலுள்ள கோவை சரளா மற்றும் கமல்ஹாசன் இருவரின் நடிப்பும் அனைவரையும் ரசிக்க வைக்கும் படியாக உள்ளது.
இதில் உள்ள மாருகோ மாருகோ பாடல் மற்றும் கமல்ஹாசனின் நடிப்பு இத்திரைப்படத்தை ஒரு மிகச் சிறந்த காமெடி படமாக உருவாக்கியுள்ளது.
கல்பனா அரவிந்த் மற்றும் ஹீரா என அனைவரும் இத்திரைப்படத்தில் மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
இத்திரைப்படத்தின் இறுதியில் உள்ள கமல்ஹாசன் மற்றும் கோவை சரளா கார் காட்சிகள் ஒரு சிறந்த காமெடி காட்சியாகும்.
இத்திரைப்படத்தில் தன் கணவனை
திருத்துவது மட்டுமல்லாமல், மற்ற படங்களைப் போல் அந்தப்பெண்ணை வில்லியாக மாற்றி விடாமல் அந்த பெண்ணுக்கும் ஒரு நல்லவனுடன் வாழ்வு கிடைக்க வேண்டும் என நினைப்பது பெண்மைக்கே மரியாதை தரும் விதமாக உள்ளது. இது இத்திரைப்படத்தின் அடுத்த சிறப்பு.
ஆக மொத்தத்தில் இது ஒரு நல்ல கருத்துள்ள காமெடி திரைப்படம் . அனைவரும் கண்டு வாய்விட்டு சிரிக்க வாழ்த்துக்கள்!.
- Gowri's View ❤️.
0 Comments