சகலகலா  சம்மந்தி ( விசு): 

            
              1989 -ல் ஜூலை ஆறாம் தேதி விசுவின் இயக்கத்தில் சகலகலா சம்பந்தி திரைப்படம் வெளியானது.
             
            இத்திரைப்படம் 2 மணி நேரம் மற்றும் 16 நிமிடங்கள் கொண்டுள்ளது.
  

சகலகலா  சம்மந்தி ( விசு):
சகலகலா  சம்மந்தி ( விசு): 


திரைக்கதை, வசனம் மற்றும் இயக்கம் :      விசு.

தயாரிப்பு :     கே.ஆர்.ஜி

நடிகர்கள் :    விசு , 
                                சந்திரசேகர்,
                                டெல்லி கணேஷ்
                                குட்டி பத்மினி,
                                 திலீப்,
                                மாதுரி
                                மனோரமா,
                                 சரண்யா மற்றும் பலர்.

இசை :    சங்கர்- கணேஷ்.



சகலகலா  சம்மந்தி( கதை):

           
      தன் பெண்ணை திருமணம் செய்து புகுந்த வீட்டிற்கு அனுப்பும் தந்தை(விசு) அந்த வீட்டில் மாப்பிள்ளைக்கு ஒரு விதவை அக்கா இருப்பதை  தெரிந்து கொள்கிறார்.
        
       அங்கு தன் சம்பந்தி வீட்டினர் அனைவரும் அந்த விதவை பெண்ணின் உள்ளத்தை புரிந்து கொள்ளாமல் இருக்கின்றனர்.அந்தப் பெண்ணும் தனிமையில் வாடிக்  கொண்டிருக்கிறாள்.
        
        இதை அறிந்து கொண்ட விசு அந்தப் பெண்ணின்  வாழ்க்கையை மாற்ற மறுமணம் செய்து வைக்க முடிவு செய்து அந்தக் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு இதை புரிய வைக்க முயற்சி செய்கிறார்.
          
        இதற்காக ஒரு குழந்தையை அந்த வீட்டின் வாசலில் போட்டு கலகத்தை ஏற்படுத்துகிறார் இதன்மூலம் அந்தப் பெண்ணின் தந்தை ,தாய் மற்றும் சகோதரர்கள் அனைவருக்கும் அந்தப் பெண்ணின் வாழ்க்கையை புரிய வைக்க முயற்சி செய்கிறார்.
   
        அத்துடன் அந்தக் குடும்பத்தில் உள்ள மற்ற பிரச்சனைகளையும்   சரி செய்ய முயற்சிக்கிறார்.
            
      இதில் வெற்றி  பெற்றாரா? விதவை பெண்ணுக்கு மறுமணம் செய்து வைக்க அந்த பெண் வீட்டார் ஒப்புக்கொண்டனரா? அந்தப் பெண்ணின் மனது மாறியதா? என்பதே சகலகலா சம்பந்தி திரைப்படத்தின் கதைச் சுருக்கமாகும்.
         
         இன்று நம்மை அம்மா கதாபாத்திரத்தில் நடித்து ஆச்சரியப்படுத்தும் நடிகை சரண்யா பொன்வண்ணன் அவர்கள் இத்திரைப்படத்தில் அந்த  விதவைப் பெண் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் .
     
       அவரின் நடிப்பு  இத்திரைப்படத்தில் நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது. விசுவுடன் போட்டி போட்டுக் கொண்டு நடித்திருக்கிறார் என்பதே உண்மை.


பாடல்கள்:

        

         * சொல்லாதே யாரும் கேட்டால்  சொல்லாதே
         *  சொர்ணமே சொர்க்கமே வா
         * உன் அப்பன் பேரு என்னடா
         * ஆத்தோரம் கருப்பு மாடு




 கௌரியின் பார்வையில்:          


 
          1980 காலகட்டங்களில் விதவை மறுமணம் என்பது எங்குமே நிகழாத ஒன்றாக இருந்து . 
         
        ஒரு பெண் இளம் வயதிலேயே விதவையாகி  விட்டாலும் கூட  அவள் தன் ஆசைகளைத் துறந்து இறந்த கணவன் நினைப்பிலேயே தன் வாழ்நாள் முழுவதும் வாழ வேண்டும்.
       
       தன்  சொந்தங்களே அவளை ஒதுக்கி வைக்கும் அவல நிலை வந்துவிடும். 
         
        எந்த சுப காரியங்களிலும் அவள் பங்கு கொள்ளக்கூடாது என்ற நிலை இருந்த காலகட்டம் அது.
 
        அந்த காலகட்டத்தில் தான் என்பதைத் தாண்டி இந்த இருபதாம் நூற்றாண்டிலும் கூட சில இடங்களில் கணவனை  இழந்து பெண்கள் படும் அவஸ்தை சொல்ல முடியாமலே போய்விடுகிறது.
           
       விதவைப் பெண்களின் மன வலிகளை புரிந்து கொண்டு ஒரு  சில இடங்களில் மாறிவிட்டன என்றாலும், பெரும்பாலானவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதே நிதர்சனம். 
       
     ஆண்களும் விதவைப் பெண்களுக்கு மறுவாழ்வு அளிக்க முன்வரவேண்டும். 
      
       இந்தத் திரைப்படத்திலும் விசு மிக அழகாக ஒரு விதவைப் பெண்ணின்  மனக்குமுறல்களையும்,அந்தப் பெண்ணின் வீட்டார் அதை கண்டுகொள்ளாமல் இருப்பதையும், பிறகு அதை அவர்களுக்கு புரிய வைக்கும் விதமும் மிக அருமை.
        
      இது அந்த பெண்ணின் வீட்டாருக்கு மட்டுமல்ல இது விதவைப் பெண்களை வைத்துள்ள அனைத்து  வீட்டாருக்கும் பொருந்தும்.
        
       இதை ஒவ்வொருவரும் புரிந்து கொண்டு தன்  மகளுக்கோ அல்லது  தமது  தங்கைக்கோ திருமணம் செய்து வைக்க  முடிவெடுக்க வேண்டும் என்பதே இந்த படத்தின் மூலம் சொல்லவரும்  மாபெரும் கருத்து.
          
      இத்திரைப்படம் ஒரு மிகச்சிறந்த படைப்பு என்பதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் இல்லை.


                                                                  - Gowri's View ❤️.