பன்றிக்கு நன்றி சொல்லி:  
         
          பன்றிக்கு நன்றி சொல்லி திரைப்படம்  பிப்ரவரி மாதம் 4-ம் தேதி 2022- ல்  OTT  தளத்தில் வெளியானது.

            இத்திரைப்படம் 1  மணி நேரம் 41 நிமிடங்கள் கொண்டுள்ளது


Pandrikku Nandri Solli Movie Review
Pandrikku Nandri Solli Movie Review


இயக்கம் : பாலா அரண்
 
ஒளிப்பதிவு : விக்னேஷ் செல்வராஜ்

நடிகர்கள் : நிஷாந்த்
                      விஜய் சத்யா
                        பாலாஜி ரத்தினம் மற்றும் பலர்.

இசை :     சுரேன் விகாஷ் 

தயாரிப்பு : ஹெட் மீடியா  ஒர்க்ஸ்.
                         


கதை:

     
    பல ஆண்டுகளுக்கு முன்பு சீனத்திலிருந்து ஒரு  பன்றியின்  சிலை ஒரு துறவி மூலம் தமிழ்நாட்டுக்கு வருகிறது.

       பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு தொல்லியல் நிபுணரால் இந்த சிலை கைப்பற்றப்பட்டு எடுத்துச் செல்லும் வழியில் சிலை கடத்தல் கும்பலால் திருடப்பட்டு பிறகு இரு இளைஞர்களிடம் வந்தடைகிறது.

       அந்த இரு இளைஞர்களும் அந்தப் பன்றியின் சிலையை ஒரு இடத்தில் மறைத்து வைத்து விட்டு அதற்கான சில குறிப்புகளையும் எழுதி வைக்கின்றன. அந்த இளைஞர்களும் மர்ம நபர்களால்  கொல்லப்படுகின்றனர்.

        இந்த நிலையில் சில ஆண்டுகளுக்குப் பிறகு அந்தப் பன்றியின் சிலையை ஒரு ரவுடி கும்பலும்,போலீசாரும் தனித்தனியே தேடி அலைகின்றனர்.

      பிறகு விதியின் விளையாட்டால் இவர்களுடன் நிஷாந்த் சிக்கிக் கொள்கிறார். நிஷாந்த் ஒரு இயக்குனராக வேண்டும் என்ற ஆசையில் இருப்பவர்.

      ஆக மூவரும் சேர்ந்து அந்த சிலையை தேடி அலைகின்றனர் கடைசியில் அதை கண்டுபிடித்தார்களா? இல்லையா? என்பதே பன்றிக்கு நன்றி சொல்லி திரைப்படத்தின் கதை.



கௌரியின் பார்வையில்:


       இது ஒரு புதுமுக இயக்குனரின் முயற்சி.
     
       பல இளைஞர்களால் ஒன்று சேர்க்கப்பட்டு உருவாக்கப்பட்ட படம்.

      இந்த முயற்சி வெற்றி அடைந்துவிட்டது  என்றே கூறலாம்.

    கதாநாயகியே இல்லாமல் இந்த காலகட்டத்திலும் கூட படமெடுக்கலாம் என நிரூபித்துள்ளனர் படக்குழுவினர்.

    இத்திரைப்படத்திற்கு ஒளிப்பதிவும் முக்கிய பங்கு வகிக்கிறது.
 
       இதில் வரும் நிஷாந்த், ரவுடி கும்பல் தலைவன் மற்றும் போலீசார் ஆகிய மூவருமே இதில் தனித்தனி கதாநாயகர்கள் தான். 

      இவர்கள் அனைவரும் நடிப்பை  மிகச் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளனர்.
     
      இது ஒரு காமெடி திரைப்படம் என்பதால் காமெடிக்கு இன்னும் கொஞ்சம் அதிகம் கவனம் செலுத்தியிருக்கலாம்.

      இருந்தாலும் இத்திரைப்படம் ஒரு வெற்றி திரைப்படமே. இனி அடுத்தடுத்து வரும் படங்களிலும் அந்த இளைஞர்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

     பன்றிக்கு நன்றி சொல்லி - ஒரு தடவை பார்க்கக் கூடிய ஒரு நல்ல திரைப்படம்.

             
                                                                                        - Gowri's View ❤️.