மகான்:


        மகான் திரைப்படம்  பிப்ரவரி மாதம் 10-ம் தேதி 2022ல், நேரடியாக OTT தளத்தில் வெளியிடப்பட்டது.

      2 மணி நேரம் 42 நிமிடங்கள் கொண்டுள்ளது.

      8.3 IMDb rating பெற்றுள்ளது.


Mahaan Movie Review
Mahaan Movie Review

 
    
எழுத்து மற்றும் இயக்கம்  : கார்த்திக் சுப்புராஜ்

ஒளிப்பதிவு :               ஷ்ரேயாஸ் கிருஷ்ணா

நடிகர்கள் :     விக்ரம்,
                                துரு விக்ரம்,
                               சிம்ரன்,
                              வாணி போஜன்,
                             பாபி சிம்ஹா மற்றும் பலர்.

இசை :    சந்தோஷ் நாராயணன் 

தயாரிப்பு நிறுவனம்:
                     செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ.

OTT :      Amazon prime video.


கதை :


      மகான் திரைப்படத்தில், விக்ரம் காந்திய கொள்கைகளை பின்பற்றும் குடும்பத்தில் பிறந்தவர், அவருடைய பெயர் காந்திமகான்.

        சிறு வயதில் சீட்டாடிக் கொண்டு இருக்கும் போது ஏற்பட்ட சண்டையினால் தன் வீட்டில் மாட்டிக்கொள்கிறார் விக்ரம் , பிறகு தான் அப்பா  மகானாக இருக்க வேண்டும் என்று சொல்லி  வளர்கிறார்.

      அவரும் ஒரு மகானாக வளர்ந்து வருகிறார்  . ஆசிரியராக ஆக பணிபுரிந்து வருகிறார்.

        பின்பு 40 வயதில் விக்ரமுக்கு அந்த வாழ்வில் ஏனோ சலிப்பு ஏற்படுகிறது பிறகு ஒரு நாள் தான் ஆசைகளை எல்லாம் நிறைவேற்ற வேண்டும் என்று குடிக்கப் போகும்போது தனது பால்ய சினேகிதன் பாபி சிம்ஹாவை சந்திக்கிறார்.

     பிறகு சண்டையினால் விக்ரமின் மனைவி சிம்ரன் அவரது மகனை அழைத்துக்கொண்டு பிரிந்து சென்றுவிடுகிறார்.

        விக்ரம் தனது சினேகிதர்கள் ஆன சத்யா மற்றும் ஞானம் என்பவருடன் சேர்ந்து சரக்கு தயாரித்து விற்கும் பணியில் ஈடுபட்டு தனக்கென ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்குகிறார்.

        இந்த நிலையில் பல ஆண்டுகளுக்குப் பிறகு தாதா என்கிற போலீஸ் அதிகாரி இவர்களது கூட்டத்தில் பல நபர்களை என்கவுன்டர் செய்கிறார் .இந்த நிலையில் அது விக்ரமின் மகன் என்பது தெரிய வருகிறது 

    பின்பு விக்ரமின் வாழ்க்கையில் என்ன நடக்கிறது? என்பதை இந்த திரைப்படத்தின் கதை.


கௌரியின் பார்வையில் :


             கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள மகான் திரைப்படம் விக்ரமுக்கு ஒரு சிறந்த comeback ஆக  இருக்கிறது.

        விக்ரம் ஒருவரையே முழு திரைப்படத்தையும் தாங்கி நிற்கிறார். இதில் விக்ரமின் நடிப்பு நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.

     மகான் திரைப்படத்தில் வாணி போஜன் நடித்துள்ளதாக காட்சிகள் Trailer -ல் வெளிவந்தது  ஆனால் வாணிபோஜன்  காட்சிகள் திரைப்படத்தில் நீக்கப்பட்டு விட்டன.  இதனைத் தொடர்ந்து இணையத்தில் "வாணி போஜன்-யை காணவில்லை" என்பது வைரலாகி வருகிறது.

        பாபி சிம்ஹாவின் நடிப்பும்   இப்படத்திற்கு பிளஸ் ஆக உள்ளது.
      
    மகான் - 2  திரைப்படம் வருவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன.

      மகான் - 2   திரைப்படமும் வெற்றி பெற காத்திருப்போம்.

      ஆக மகான் திரைப்படம் விக்ரம் துரு விக்ரம் மற்றும் பாபிசிம்ஹாவின் நடிப்பில் பார்க்க  மகான் திரைப்படம் கண்களுக்கு ஒரு ஆக்சன் விருந்தாக அமைகிறது.


    
                                                                                                        - Gowri's View ❤️.