சந்திரமுகி- 2 (நாகவள்ளி):

 
            2005 - ல்  வெளியான சந்திரமுகி திரைப்படத்தின் உடைய இரண்டாவது பாகமாக வெளிவந்ததே இந்த நாகவள்ளி  திரைப்படம். 
 

           சந்திரமுகி திரைப்படம் Manichitrathazhu என்ற மலையாள திரைப்படத்தை தழுவி பி வாசு என்பவரால் எடுக்கப்பட்டது.சந்திரமுகி திரைப்படமும் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.


        ரஜினிகாந்த் ஜோதிகா நடித்த சந்திரமுகி திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது.அதனைத் தொடர்ந்து இரண்டாவது பாகமாக தெலுங்கில் வெளியான நாகவள்ளி - யை பற்றி பார்ப்போம்.


         நாகவள்ளி திரைப்படம் 2010-ல் டிசம்பர் மாதம் 16ம் தேதி தெலுங்கில்  வெளிவந்தது.  Aptharakshaka கன்னடப் படத்தை தழுவி இப்படம் எடுக்கப்பட்டது.

         இந்த படம் 2 மணி நேரம் மற்றும் 13 நிமிடங்கள் கொண்டுள்ளது.
        
          4.5 IMDb யை இந்தப்படம் பெற்றுள்ளது. 



சந்திரமுகி- 2 (நாகவள்ளி):

சந்திரமுகி- 2 (நாகவள்ளி):





கதை,  திரைக்கதை, இயக்கம்  :
                                                                               பி. வாசு 
 
வசனம் : பரஞ்சுரி பிரதர்ஸ்

நடிகர்கள் :    வெங்கடேஷ்  
                               அனுஷ்கா ஷெட்டி மற்றும் பலர்.

ஒளிப்பதிவு : ஷ்யாம் கே நாயுடு

இசை : குருகிரன்

தயாரிப்பு : ஸ்ரீ சாய் கணேஷ்  புரோடக்சன்ஸ்.



நாகவள்ளி (கதை):


              நாகவள்ளி திரைப்படம் சந்திரமுகி திரைப்படத்தின் இரண்டாவது பாகம் ஆகும்.       
  
         சந்திரமுகி திரைப்படத்தின் இறுதியில் கங்கா  சரியான பிறகு அந்த அறையில் உள்ள அனைத்து பொருட்களையும் மாற்றுவர்கள்.அதில் அந்த அழகான சந்திரமுகி ஓவியத்தையும் எடுத்துக் கொண்டு வெளியில் போட்டு விடுகின்றனர்.

     இது ஒரு குருக்களிடம் வந்து பிறகு   மாறி மாறி, பரதநாட்டியத்தில் வெற்றி பெற்றதற்காக காயத்திரி என்பவரிடம் இந்த சந்திரமுகி ஓவியம் வழங்கப்படுகிறது.இதுவே படத்தின் ஆரம்பம்.

      இந்த ஓவியம் வந்தபிறகு காயத்ரியின் கணவர் விபத்தில் இறக்கிறார்  காயத்ரிக்கு மனநிலை பாதித்து விடுகிறது.

     காயத்ரிக்கு இரு  சகோதரிகள்  அப்பா, அம்மா, சித்தி, சித்தப்பா என ஒரு அழகிய குடும்பம்.

     அந்த குடும்பத்தில் ஏதோ தவறு நடப்பதாக உணர்வதால் அவர்கள் ஆச்சாரியாவை அழைக்கின்றனர்.

      ஆச்சாரியார் இது சந்திரமுகி ஆவி என்பதை உணர்ந்து சரவணனிடம் தெரிவிக்கிறார். சரவணன்  (ரஜினியின்) சீடராக வருகிறார் வெங்கடேஷ் இந்த வீட்டிற்குள் வருகிறார்.

        இந்த வீட்டிலும் வெங்கடேஷ் வந்து சந்திரமுகி திரைப்படத்தைப் போலவே யார் மீது ஆவி உள்ளது எனக் குடும்பமே குழம்பிப் போயுள்ள நிலையில் இவர் கண்டுபிடிக்கிறார்.
          
        இதில் ஒரு புதிய மாற்றம் என்னவென்றால் நம் சந்திரமுகியில் காட்டிய வேட்டையன் ராஜா புகைப்படம் உண்மையான வேட்டையன் ராஜா உடையது அல்ல எனவும் அது அந்த வேட்டையன்  ராஜாவின் தம்பி எனவும், மேலும் வேட்டையன் ராஜா வெங்கடேஷ் மாதிரி இருப்பார் எனவும் ஒரு புதிய திருப்புமுனையை  வரலாற்று புத்தகம் மூலம் உண்மையான சந்திரமுகி கதைத்து எடுத்து செல்கிறார்கள்.
         
        சந்திரமுகியாக அனுஷ்கா நடித்துள்ளார். 

      இதில் அடுத்த மிகப்பெரிய திருப்புமுனையாக அந்த வேட்டையன்  ராஜா இன்னும் சாகவில்லை அவர் ஒரு குகைகளில் வாழ்கிறார் என்பது போலவும் கதை நகர்கிறது .

         இந்த தடவை  சந்திரமுகி உண்மையான வேட்டையன் ராஜாவை கொன்று பகையை  முடிக்கிறது.




கௌரியின் பார்வையில் :

              
        இந்த திரைப்படம் சந்திரமுகி அளவிற்கு வெற்றி பெறவில்லை. இதற்கு காரணம் இந்த திரைப்படத்தில் நடித்தவர்களின் நடிப்பு அந்த அளவிற்கு சிறப்பாக இல்லை என்பதே உண்மை.
      
           இந்த படத்தின் இறுதிகட்டத்தில் வரும் வெங்கடேஷ் நடனம் பார்ப்போருக்கு விறுவிறுப்பை  ஏற்படுத்தாமல் அருவருப்பையே ஏற்படுத்தியுள்ளது.

       மேலும்   சந்திரமுகி திரைப்படத்தில் உள்ளது போலவே வரும் பல காட்சிகள் படத்தின் தோல்விக்குக் காரணமாக அமைந்தது .


சந்திரமுகி- 2 (நாகவள்ளி):

சந்திரமுகி- 2 (நாகவள்ளி):



    
   தற்பொழுது ராகவா லாரன்ஸ் அவர்களும் பி வாசு அவர்களும் இணைந்து   நாகவள்ளி திரைப்படத்தை தமிழில் இயக்க முடிவு செய்துள்ளனர். அதற்காகவே இந்த பதிவு.

       ராகவா லாரன்ஸ் ஒரு மிகச் சிறந்த நடிகர். தமிழில் நடிக்கும் கதாபாத்திரங்களை பொருத்து படத்தின் வெற்றி அல்லது தோல்வி நிர்ணயிக்கப்படலாம்.

      தமிழில் ராகவா லாரன்ஸ்  நடிக்கவுள்ள சந்திரமுகி 2 திரைப்படம் நமது சந்திரமுகி போலவே வெற்றியடைய வாழ்த்துக்கள். நாம் பொறுத்திருந்து பார்ப்போம்!.

     
                                                                                                          - Gowri's View ❤️.