வரவு நல்ல உறவு ( விசு)

       
       
      1990 , 5 ஏப்ரலில் விசுவின் இயக்கத்தில் வரவு நல்ல உறவு படம்  வெளியானது. 

      8.1 IMDb யை இந்தப்படம் பெற்றுள்ளது. 

      இந்த படம் 2 மணி நேரம் மற்றும் 19 நிமிடங்கள் கொண்டுள்ளது

.

Varavu Nalla Uravu Visu Movie Review
Varavu Nalla Uravu Visu Movie Review 


கதைச்சுருக்கம் :

       
      அம்பலவாணன்( விசு )மற்றும் சந்திரசேகர் ( கிஷ்மு )இவர்கள் இருவரும் பால்ய சினேகிதர்கள்.

      இவர்கள்  இருவரின் வாழ்க்கையிலும் நடக்கும் நிகழ்வுகளே இந்த படத்தின் கதை.

     இதில் சந்திரசேகருக்கு நடந்த சில கசப்பான நிகழ்வுகளால் அவருக்கு குடும்பத்தின் மீதும் உறவுகள் மீதும் நம்பிக்கை அற்ற நிலைமை நிலவுகிறது.
    
    ஆனால் அம்பலவாணன் குடும்பத்தையே  நம்பி வாழ்கிறார். இவர்களின் நிலை என்ன ஆனது என்பதே  வரவு நல்ல உறவு படத்தின் கதைச்சுருக்கம்.




கதை ,திரைக்கதை மற்றும் இயக்கம்       :    விசு.
தயாரிப்பாளர்   :       ராஜம் பாலசந்தர்,   புஷ்பா கந்தசாமி

நடிகர்கள்            :   விசு                                                                  
                                    அன்னபூர்ணா 
                                  கிஷ்மூ
                                  ரேகா மற்றும் பலர்.

இசை                   :   சங்கர்- கணேஷ்

தயாரிப்பு             :   கவிதாலயா  புரோடக்சன்ஸ் நிறுவனம்





ஏன் இந்தப் பதிவு? :

        
      
     இந்த மாதிரி வாழ்க்கைக்குத் தேவையான பல நல்ல விஷயங்களை படங்கள் மூலம் வெளிப்படுத்தியவர் விசு. 

     இந்த மாதிரி படங்களை நம்மில் பெரும்பாலானோர் பார்த்திருக்க மாட்டோம். 
   
     அவர்களுக்காக இந்த மாதிரியான நல்ல படங்களை நான் என்னால் முடிந்த வரை உங்களுக்கு கதை மூலம் தெரியப்படுத்துகிறேன். 

    இது ஒரு புது முயற்சி.



வரவு நல்ல உறவு :


           
     அம்பலவாணன் தன் மனைவி இரண்டு மகள்கள் , இரண்டு மகன்கள்  மற்றும் பேரக் குழந்தைகளுடன் வசிக்கிறார். 

       அவரது ஓய்வூதிய பணத்தை மனைவி மூத்த மகள் மற்றும் மகன்களுக்கு பிரித்துக் கொடுத்து விடுகிறார். 

      தாங்கள் மற்றும்  இளைய மகளை பிள்ளைகள் காப்பாற்றுவார்கள் என எண்ணுகிறார்.

       அப்பொழுது  தான் அவர்களின் சுயரூபம் தெரிய வந்தது. 

      அவர்கள் தாய் தந்தையர் மற்றும் தங்கையை மரியாதை இன்றி நடத்துகின்றனர் தங்கைக்கு  வயதானவரை இரண்டாவதாக திருமணம் செய்து வைக்க நினைக்கின்றனர். 

       இதனால் வருத்தமடைந்த அம்பலவாணன் அவரது மனைவி மகளுடன் விட்டு விட்டு வெளியேறுகிறார் தெருவிற்கு தள்ளப்படுகிறார். 
   
     சந்திரசேகருக்கோ இரண்டு மகன்கள் மூத்த மருமகளாக ரேகா வருகிறார்.ரேகா சந்திரசேகரை அன்பாக கவனித்துக் கொண்டு அவரின் மனதில் இடம் பிடித்து அவரை மனம் மாற்றுகிறார்.

     சந்திரசேகரின் இரண்டாவது மகன் அம்பலவாணனின்  இளைய மகளை திருமணம் செய்து கொள்கிறான்.

       பிறகு அம்பலவாணன் தன் மகன்கள் மீதும் மூத்த மகள் மீதும் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர திட்டமிடுகிறார்.

     இதை அறிந்த பிள்ளைகள் தன் தாயிடம் வந்து கெஞ்சுகின்றனர் மனைவி அவரிடம் வழக்கு தொடர வேண்டாம் என வாதிடுகிறார் ஆனால் அம்பலவாணன் மறுக்கவே அவன் மனைவி தற்கொலை செய்து கொள்கிறார். 

       இதனால் அம்பலவாணன் மிகுந்த துயரத்திற்கு ஆளாக்கப்பட்டு மீண்டும் அவருடைய பழைய நிறுவனத்திலேயே வேலை வேண்டி நிற்கிறார்.

       இத்துடன் இந்த திரைப்படம் நிறைவுறுகிறது.
 

 கருத்து :

       
     "தனக்கு மிஞ்சி தான் தானமும் தருமமும், பிள்ளைகளுக்கு மிஞ்சி தான் புருஷனும் அரசனும் ".
                                      - விசு.


பாடல்கள் :

          
         * பொண்டாட்டி ஒரு பாதி
          *  கண்ணீரில் தள்ளாடும்
          * சந்தோஷமே உல்லாசமே



கௌரியின் பார்வையில்: 

        
       விசு படம் என்றாலே அதில்  வாழ்க்கைக்கு தேவையான நல்ல கருத்துக்களை உணர்த்தும் விதமாகவே இருக்கும் இந்த படமும் அப்படித்தான். 

       இது அனைத்து வயதினரும் தவறாமல் பார்க்க  வேண்டிய ஒரு அற்புதமான படைப்பு.

          
                                                                                                    - Gowri's View ❤️.