பொங்கல் திருவிழா:

               

         வணக்கம் நண்பர்களே! 🙏

 ஜனவரி 14ஆம் தேதி பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகிறது. பொங்கல் பற்றி சில சுவாரஸ்யமான தகவல்களைப் பற்றி  பார்ப்போம்.




 தைப்பொங்கல் வரலாறு:

           

    நம் முன்னோர்கள் சூரியனுக்கும் உழவுக்கு உறுதுணையாக இருக்கும் மாடுகளுக்கும் மற்றும் இயற்கைக்கும் நன்றி செலுத்துவதற்காக இந்த பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. 

     ஆடிப்பட்டம் தேடி விதைக்கணும்  .என்பதுபோல முற்காலத்தில் ஆடியில் விதைத்து மார்கழியில் அறுவடை செய்தனர்.நீர்வளம் மிக்க பகுதியில் உள்ளவர்கள் வருடத்திற்கு மூன்று முறை அறுவடை செய்வார்கள். 

      நீர் வளம் குன்றிய பகுதியில் உள்ளவர்கள் இந்த ஆடியில் நெல் நாற்று  நற்று  மார்கழியில் அறுவடை செய்வதை வழக்கமாக வைத்திருந்தனர்.அவ்வாறு மார்கழியில் அறுவடை செய்த புது அரிசியை வைத்து அறுவடைக்கு உறுதுணையாக இருந்த சூரியக் கடவுளுக்கும், மாடுகளுக்கும் மற்றும் இயற்கைக்கும் அந்த புத்தரிசி கொண்டு மஞ்சள் வெல்லம் வைத்து பொங்கலிட்டு அவர்களுக்கு படைத்தனர்.இதுவே பொங்கலின் வரலாறு .தைப் பொங்கலை   சங்க இலக்கியங்களில் தை நீராட்டு விழா என குறிப்பிடுகின்றனர். 




Pongal
Pongal 


        
இந்த பொங்கல் நான்கு நாட்கள் கொண்டாடப்படுகிறது.



போகி பண்டிகை:

          
    " பழையன கழிதலும் புதியன புகுதலும் "   மார்கழி மாதம் கடைசி நாளன்று போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது .இந்த நன்னாளில் வீட்டில் உள்ள அனைத்தையும் சுத்தம் செய்து பொங்கலுக்கு தயாராக வீட்டில் உள்ள பழைய பொருட்களை எரிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். 

     ஆனால் அதுமட்டுமின்றி இது பொருட்களை எரிப்பதை விட மனதில் உள்ள தீய எண்ணங்களை அகற்றி விட்டு புது எண்ணங்களை பெறச் செய்வதற்கான ஒரு விழாவாகும்.

     சில கிராமங்களில் போகிப்பண்டிகை அன்று மக்கள் அழுவதை வழக்கமாக கொண்டிருந்தனர் 

      இதை அறிந்த அறிஞர்கள் போகியானது புத்தர் இறந்த நாளாக இருக்கக் கூடும் என கண்டறிந்துள்ளனர்.

தைத்திங்கள் முதல் நாள் :

            

      தைத்திங்கள் முதல் நாள்  பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
        அதிகாலையில் எழுந்து மக்கள் அனைவரும் மாவிலை தோரணங்கள் அனைத்தும் கட்டி ,வாசலில் கோலமிட்டு, அந்தக் கோலத்தில் பொங்க பானை வைத்து  கதிரவனுக்கு பொங்கலிட்டு,முதலில் பொங்கலை கதிரவனைக் படைத்துவிட்டு,பிறகு  சுற்றத்தாருக்கும், உறவினருக்கும் கொடுத்துவிட்டு தாமும் உண்டு குடும்பத்துடன் பொங்கலை மக்கள் கொண்டாடி வருகிறார்கள் 

     இது அக்காலம் முதல் இன்று வரை கொண்டாடப்படும் ஒரு சிறப்பு  வாய்ந்த விழாவாகும்.

    இது உலகெங்கும் வாழ்கின்ற அனைத்து தமிழ் மக்களாலும் இவ்விழா கொண்டாடப்படுகிறது .

மாட்டுப் பொங்கல்: 

      

      தைத் திங்கள் இரண்டாம் நாள் மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது 

      இது   உழவர் திருநாள் என்றும் அழைக்கப்படுகிறது. இன்னாளில் உழவுக்கு உறுதுணையாக இருந்த மாடுகளுக்கு நன்றி செலுத்துவதற்காக மாடுகளை குளிப்பாட்டி அதன் கொம்புகளிலும், உடலிலும் வண்ணம் பூசி மாட்டுத் தொழுவத்தை சுத்தம் செய்து மாட்டு தொழுவத்தில் பொங்கல் வைத்து முதலில் அதை மாட்டிற்கு அளித்துவிட்டு மாடுகளுக்கு பழம் அனைத்தும் கொடுத்துவிட்டு  பிறகு தாமும் உண்பர்.

    இவ்வாறே இந்த   பொங்கலை மக்கள் கொண்டாடுகின்றனர்.இந்த நாளிலே தமிழரின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மிகவும் பிரபலமானது . 

      தமிழரின் வீரத்தை வெளிப்படுத்துவதில் ஜல்லிக்கட்டு மிக முக்கியமான ஒன்று.

   இந்த ஜல்லிக்கட்டுக்காக நடந்த போராட்டம் அனைவர் மத்தியிலும் என்றும் நிலைத்திருக்கும். 


மாட்டுப் பொங்கல்
மாட்டுப் பொங்கல்




மாட்டுப் பொங்கல்
மாட்டுப் பொங்கல்



காணும் பொங்கல்:

          
       இது பொங்கலின் கடைசி நாளாகும். 

      இந்த காணும் பொங்கல் அன்று மக்கள் அனைவரும் ஒன்றுகூடி தங்கள் உற்றார்  உறவினர் வீடுகளுக்கு சென்று இனிப்பு  வழங்கி ,பெரியவர்களிடம் ஆசி பெறுவதற்காக  கொண்டாடப்படுகிறது. அது மட்டுமின்றி அனைவரும்  குடும்பத்துடன் சேர்ந்து கடற்கரைகளிலும் பொது இடங்களிலோ சென்று காணும் பொங்கல் அன்று மகிழ்ச்சியுடன் இருப்பர்.


தமிழ் புத்தாண்டா?:

         
     பொதுவாக நாம்  சித்திரை  முதல் நாள் தமிழ் புத்தாண்டாக கொண்டாடி வருகிறோம்.

     எனினும் இது பலதரப்பட்ட சர்ச்சைகளுக்கு உற்பட்டு வருகிறது. 2008ஆம் ஆண்டு திமுக அரசால் தை மாதம் முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என அறிவிக்கப்பட்டது.

     பிறகு சில காரணங்களை சுட்டிக்காட்டி அதிமுக அரசு  2011 ல் தை மாதம் தமிழ் புத்தாண்டு இல்லை சித்திரை மாதமே என வெளியிட்டது.

     இப்பொழுது திரும்பவும் திமுக தலைமையிலான அரசு   தமிழ் புத்தாண்டு மற்றும் தமிழ் பொங்கல் வாழ்த்துக்கள் என அச்சிடப்பட்டு பொங்கல் பரிசினை வழங்கியுள்ளது.

     பலதரப்பட்ட சர்ச்சைகள் இருந்தபோதிலும் தமிழ் புத்தாண்டாக இல்லாவிடினும் இது தமிழருக்கு ஒரு மிகச்சிறந்த நாளாகவே கருதப்படுகிறது.


கௌரியின் பார்வையில்:


           இந்த இக்கட்டான சூழ்நிலையில் நாம் மக்கள் அனைவரும் பொங்கல் திருநாளில்  கதிரவனுக்கும் மாடுகளுக்கும் நன்றி தெரிவித்துவிட்டு நம் குடும்பத்துடன் இந்த பொங்கலை வெளியில் செல்லாமல் மகிழ்ச்சியுடனும், நலமுடனும் கொண்டாடி  மகிழ்வோமாக!.

       இந்நாளில் மிக முக்கியமான ஒன்று கரும்பாகும்.இதையும் உண்டு அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவோம்.!

       
                                                                                               Gowri's View ❤️.