பெண்மணி அவள் கண்மணி(விசு) :
1988 -ல் 11 மார்ச் மாதத்தில் விசுவின் இயக்கத்தில் பெண்மணி அவள் கண்மணி திரைப்படம் வெளியானது.
இத்திரைப்படம் 2 மணி நேரம் மற்றும் 27 நிமிடங்கள் கொண்டுள்ளது.
7.7 IMDb யை பெற்றுள்ளது.
கதை ,திரைக்கதை, வசனம் மற்றும் இயக்கம் : விசு.
தயாரிப்பாளர் : ராஜம் பாலசந்தர், புஷ்பா கந்தசாமி
நடிகர்கள் : விசு ,
கிஷ்மூ,
பிரதாப் போத்தன்,
குட்டி பத்மினி,
வடிவுக்கரசி,
மனோரமா,
சீதா மற்றும் பலர்.
இசை : சங்கர்- கணேஷ்
ஒளிப்பதிவு : பாலகிருஷ்ணன்
தயாரிப்பு : கவிதாலயா புரோடக்சன்ஸ் நிறுவனம்.
ஏன் இந்தப் பதிவு? :
வாழ்க்கைக்கு தேவையான பல நல்ல கருத்துடைய படங்கள் நமது தமிழ் சினிமாவில் ஏராளம்.
அதிலும் விசு நல்ல கருத்துக்களை காமெடி கலந்து தெரிவிப்பதில் வல்லவர்.
ஏற்கனவே குறிப்பிட்டது போல நமது பதிவில் புதிய முயற்சியாக விசுவின் திரைப்படங்களை என்னால் முடிந்த வரை உங்களுக்கு தெரியப்படுத்துவதில் மகிழ்ச்சியடைகிறேன்.
அதிலும் பெண்மணி அவள் கண்மணி திரைப்படம் தெலுங்கிலும் ரீமேக் (Aadade Adharam) செய்யப்பட்டுள்ளது.
பெண்மணி அவள் கண்மணி கதை:
பெண்மணி அவள் கண்மணி திரைப்படத்தில் ரேடியோ மாமாவாக விசு வருகிறார்.
விசு குடும்பம் மகன், மருமகள், பேரன் ,பேத்திகள் உடைய ஒரு அழகான குடும்பம்.
விசு தன்னுடைய பக்கத்து வீட்டுக்காரர்களின் பிரச்சனைகளை சரி செய்ய உதவுவதால் தேவையில்லாத பல சிக்கல்களில் மாட்டிக் கொள்கிறார்.
இதனால் அவரது குடும்பம் வேறு இடத்திற்கு இடம் பெயர்கிறது.
அந்த காலனியில் 4 குடும்பங்களில் உள்ள பிரச்சினைகளை விசு எப்படி சரி செய்கிறார் என்பதை மையப்படுத்தியே பெண்மணி அவள் கண்மணி திரைப்படத்தின் கதை நகர்கிறது.
இதில் அவ்வப்போது விசு மற்றும் விசுவின் மகன் உரையாடல் ரசிக்கும்படியாக உள்ளது.
விசு அந்த நான்கு குடும்பங்களின் பிரச்சினைகளை சரி செய்தாரா? விசுவின் மகன் இதை ஏற்றுக்கொண்டாரா? என்பதே இந்த படத்தின் கதை.
இதை மிக அழகாக காமெடி கலந்து பல கருத்துகளை உள்ளே வைத்து விசு பெண்மணி அவள் கண்மணி திரைப்படத்தை நமக்குத் தந்துள்ளார்.
இத்திரைப்படத்தில் வரும் வசனங்கள் பல நல்ல கருத்துக்களை வெளிப்படுத்தும்.
பாடல்களின் வரிகளும் கேட்பதற்கு இனிமையாகவும் கருத்துக்கள் உள்ளடக்கியதாகவும் இருக்கும்.
இத்திரைப்படத்தில் வரதட்சினை பற்றியும், மாமியார் மருமகள் உறவு , கணவன் மனைவிக்கு இடையேயான உறவு என அனைத்து உறவுகள் எவ்வாறு இருக்க வேண்டும் என பல நல்ல கருத்துக்கள் இடம்பெற்றுள்ளன.
இக்காலத்திற்கும் ஏற்ற கருத்துக்களை அன்றே விசு நமக்கு படமாக தந்துள்ளார்.
பாடல்கள்:
* மூங்கில் இலை காடுகளே (male version & female version)
* நானும் ஒரு ராக்கோழி தான்
* பெண்மணி அவள் கண்மணி
* ஆரம்பமே இப்பதானு
கௌரியின் பார்வையில்:
விசு படம் என்றாலே ஒரு தனி சிறப்பு.
அதிலும் இத்திரைப்படத்தின் பாடல்கள் மிகச் சிறப்பு.
இத்திரைப்படத்தில் ஒரு குடும்பம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கேற்ப விசுவின் குடும்பம் வாழ்ந்து காட்டி இருக்கிறது.
இது பெண்களை போற்றக்கூடிய அதே சமயத்தில் பெண்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என கூறும் ஒரு மிகச்சிறந்த திரைப்படம் பெண்மணி அவள் கண்மணி.
இந்த படத்தில் இடம் பெற்றுள்ள 'மூங்கில் இலை காடுகளே 'பாடல் கேட்பதற்கு மிக இனிமையாக இருக்கும்,
இது எனக்கு மிகவும் பிடித்தமானது.
இந்தப்பாடல் மட்டுமல்லாது இத் திரைப்படத்தில் உள்ள அனைத்து பாடல்களும் நம் மனதை மயக்கும்.
இத்திரைப்படத்தை இதுவரை பார்க்காதவர்கள் பார்க்க வேண்டிய மிகச்சிறந்த படைப்பு.
- Gowri's View ❤️.
0 Comments