நாய் சேகர்:

         
           நாய் சேகர் திரைப்படம் ஜனவரி மாதம் 13ஆம் தேதி 2022 பொங்கலுக்கு திரையரங்குகளில்  வெளியானது.

      இத்திரைப்படம் 131 நிமிடங்கள் கொண்டுள்ளது.




Naai Sekar Movie Review
Naai Sekar Movie Review



         
 இயக்கம் : கிஷோர் ராஜ்குமார்

 எழுத்து : கிஷோர் ராஜ்குமார்&
                   பிரவீன் பாலு

ஒளிப்பதிவு :  பிரவீன்  பாலு

நடிகர்கள் : சதீஷ்,
                      பவித்ர லட்சுமி,
                      ஜார்ஜ் மரியான்,
                       கணேஷ்,
                       மனோபாலா,
                       KPY பாலா மற்றும் பலர்.

இசை : அஜீஷும் மற்றும் அனிருத் 

தயாரிப்பு நிறுவனம்:
                         AGS       என்டர்டெயின்மென்ட்

தயாரிப்பு :      கல்பாத்தி S அகோரம்.



கதை:



        நாய் சேகர் திரைப்படத்தில் காமெடியனாக இதுவரை வலம்  வந்த  சதீஷ் முதல் முறையாக கதாநாயகனாக  நடித்துள்ளார். 

       மேலும்  Cook With Comali நிகழ்ச்சி மூலம் பிரபலமான பவித்ரா லட்சுமி இத்திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இத்திரைப்படம் கிஷோர் ராஜ்குமாரின் முதல் படமாகும்.
           
     சதீஷ் இப்படத்தில் ஒரு ஐடியில் வேலை பார்க்கும் கதாநாயனாக நடித்துள்ளார்.சதீஷ் சிறுவயது முதலே நாயை வெறுக்கிறார்.

      சதீஷின் பக்கத்து வீட்டுக்காரர் ஒரு ஆராய்ச்சியாளர்(ஜார்ஜ் மரியான்), அவர் DNA மாற்று ஆராய்ச்சி செய்து வருகிறார்.

    இந்த ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டு உள்ள ஒரு நாய் சதீஷ் கடித்து விடுகிறது.

    இதனால் நாயின் குணாதிசயங்கள் சதீஷ்க்கு வருகின்றது. மாற்று மருந்து தயாரித்த பிறகு நாய் காணாமல் போய்விடுகிறது.
          
     பிறகு காணாமல் போன நாயை சதீஷ் கண்டுபிடித்தாரா? மாற்று மருந்து செலுத்தப்பட்டு விட்டதா ? சதீஷின் காதல் கை கூடியதா? என பல திருப்பங்கள் கொண்டதே இந்த நாய் சேகர்  திரைப்படத்தின் கதை.



கௌரியின் பார்வையில்:




              நாய் சேகர் திரைப்படம் கதாநாயகன், கதாநாயகி மற்றும் இயக்குனர் அனைவருக்கும் இது  முதல் படம்.அனைவரும் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

      நாய்க்கு ( மிர்ச்சி சிவா டப்பிங் செய்துள்ளார்).அது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. 

    நாயின் நடிப்பும் ரசிக்கும்படியாகவே உள்ளது. 

    இத்திரைப்படத்தில் பாலா,மனோபாலா ,மாறன் மற்றும் சுனிதா என பல காமெடி பட்டாளங்கள் களமிறங்கியுள்ளன.இருப்பினும் படத்தின் நீளம் சற்று அதிகமாக இருப்பதாக தோன்றியது. 

   சில இடங்களில் காமெடி சற்று குறைவாகவே காணப்படுகிறது.

     சதீஷ் இத்திரைப்படத்தில் நடனம், காமெடி, காதல் என தன்னுடைய முழு திறமையையும் வெளிப்படுத்தி உள்ளார்.  

     பொங்கலுக்கு குடும்பத்துடன் சென்று திரையரங்குகளில் காணக்கூடிய ஒரு நல்ல காமெடி திரைப்படம்  இந்த நாய் சேகர்.


                                                                                                             - Gowri's View ❤️.