தென் திருப்பதி (காமன்தொட்டி)

           

     இப்பொழுது தட்சின திருப்பதி அல்லது தென்திருப்பதி  பற்றி பார்க்க போகிறோம்.
            

    தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு வருவாய் கிராமம் காமன்தொட்டி.
காமன்தொட்டி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து நாற்பத்தி ஒன்று கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. 2011ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி இந்த கிராமத்தில் மக்கள் மக்கள் தொகை 6524 ஆகும் ஆகும்.

            
   காமன் தொட்டியில் நிறைய வழிபாட்டுத்தலங்கள் உள்ளன.அவை பின்வருமாறு,
  • காமன்தொட்டி பன்னப்பள்ளி சஞ்சீவராய சுவாமி கோயில்
  • காமன்தொட்டி வெங்கட்ரமண சாமி கோவில்
  • காமன்தொட்டி ஆளியாளம் வெங்கட்ராம சுவாமி கோயில்
  • காமன் தொட்டிக்கு அருகில் உள்ள கோபசந்திரம்  வெங்கட்ரமணசாமி கோவில்.இதுவே தென் திருப்பதி என்று அழைக்கப்படுகிறது.


கோபசந்திரம் வெங்கட்ராமணசாமி கோவில் - (தென்திருப்பதி) : 


தென்திருப்பதி (காமன்தொட்டி)
தென்திருப்பதி (காமன்தொட்டி)

     

    இந்த கோவில் ஓசூர்- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் அமைந்துள்ளது.கோவிலுக்கு அருகே ஒரு நீரோடை உள்ளது. இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில் திருப்பதி தேவஸ்தானத்தில் உள்ளது போலவே பெருமாள்  அருள்பாலிக்கிறார்.  

     இதுவே இக்கோவிலின் முக்கிய சிறப்பு. 

    ஓசூர் மற்றும் பெங்களூரில் உள்ள பல மக்களுக்கு இது முக்கிய வழிபாட்டு தலமாக விளங்குகிறது.மார்கழி மாதத்தில் இந்தக் கோவிலில்  அனைத்து சனிக்கிழமைகளிலும் மக்கள் கூட்டம் அலை மோதும்.


தென்திருப்பதி (காமன்தொட்டி)
தென்திருப்பதி (காமன்தொட்டி)


          
     இங்கு உள்ள அந்த நீரோடை அங்குள்ள கிராம மக்கள் மற்றும் சுற்றுலாவாசிகளுக்கும் விருப்பமான ஒன்றாக திகழ்கிறது.



தென்திருப்பதி (காமன்தொட்டி)
தென்திருப்பதி (காமன்தொட்டி)


                  
தென்திருப்பதி (காமன்தொட்டி)
தென்திருப்பதி (காமன்தொட்டி)




    தக்ஷின திருப்பதி தோன்றிய சுவாரஸ்யமான வரலாறு: 

       

            பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இக்கிராமத்தில் வாழ்ந்த இரு சகோதரர்கள் திருப்பதி செல்வதை வழக்கமாக கொண்டிருந்தனர்.

        அண்ணன் சென்று வந்த பிறகு தம்பியும் தம்பி சென்று வந்த பிறகு அண்ணனும் இவ்வாறு மாறி மாறி இருவரும் திருப்பதி செல்வதை வழக்கமாக கொண்டிருந்தனர்.அந்த சமயம் அண்ணனுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது.

         அவருக்கு திருப்பதி செல்லவில்லை என்ற ஏக்கமும் தொற்றிக்கொண்டது.அண்ணன் கனவில் தோன்றிய வெங்கட்ரமணன் நீ இருக்கும் இடத்திலேயே நானும் உதிப்பேன் என்று கூறிவிட்டு சென்றார்.


              சில நாட்களுக்குப் பிறகு தம்பி  ஆடு-மாடுகள் மேய்க்கச் சென்ற போது ஒரு மாடு மட்டும் காணாமல் போய்விட்டது.அந்த மாட்டை தேடும் பொழுது அது சுயம்பு வடிவிலான ஒரு சிலையின் முன் படுத்திருந்தது.அந்த சுயம்பு வடிவிலான சிலையினை அந்தச் பெருமாளே தோன்றியதாக என எண்ணி மக்கள் கோவில் கட்டி வழிபடத் தொடங்கினர் இதுவே  தக்ஷின திருப்பதி தோன்றிய வரலாறு என  கூறப்படுகிறது.
    
     மேல்மருவத்தூர் செல்லும் பக்தர்கள் கூட வந்து தங்கி பிரசாதம் வாங்கி விட்டு ஓய்வெடுத்து செல்லும் இடமாக இந்த தக்ஷின திருப்பதி   கோவில்  விளங்குகிறது.

கௌரியின் பார்வையில் :

       
       கோபசந்திரம் வெங்கட்ரமண சாமி கோவில் அல்லது தட்சிண திருப்பதி ஆனது  மிகச் சிறந்த ஒரு ஆன்மிக சுற்றுலாத் தலமாக உள்ளது இங்கு உள்ள நீரோடையில் அனைத்து வயதினரும் வந்து சந்தோஷமாக பொழுதை கழிக்கின்றனர். 

           இது கிருஷ்ணகிரி, ஓசூர் மற்றும் பெங்களூர்  அருகில் உள்ள மக்களுக்கு கிடைத்த ஒரு அருமையான சுற்றுலா தலமாகும்.
      

      இங்கு உள்ளவர்கள் அனைவரும் தவறாமல் சென்று வெங்கட்ரமண சுவாமி அருளை பெறுக !
   
                                                                                                         -  Gowri's View❤️.